search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்கள் அலட்சியம்"

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி சசிகலா (வயது 23). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சசிகலா சிகிச்சை பெற்றார். அவருக்கு செவிலியர்கள் ஊசி போட்டனர். அப்போது ஊசி உடைந்து சசிகலா கையில் தங்கி விட்டது. இதனை கவனிக்காமல் வீடு சென்ற சசிகலாவுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உடைந்த ஊசி கையில் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    சசிகலா

    பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது டாக்டர்கள் கையில் இருந்த ஊசியை அகற்றி விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து வலி குறையாததால் அது ஆபரேசன் செய்ததால் ஏற்பட்ட வலி என்று சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

    தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள சசிகலாவுக்கு நெஞ்சு பகுதியில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் தனது வீட்டுக்கு அருகில் கிளினிக் நடத்தும் ஒரு டாக்டரிடம் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அப்போது முறிந்து போன ஊசி கையில் இருந்து நகர்ந்து நெஞ்சு பகுதிக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் ஊசியை அகற்றவில்லை. கையில் இருந்த ஊசி தற்போது நெஞ்சு பகுதிக்கு வந்துவிட்டது. தஞ்சை மருத்துவமனையில் ஆபரேசன் செய்ததாக கூறி என்னை ஏமாற்றிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×